தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி - டீசல் விலை குறைப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

Excise duty on Petrol and Diesel
Excise duty on Petrol and Diesel

By

Published : Nov 3, 2021, 8:29 PM IST

டெல்லி: இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி முறையே 5 ரூபாய், 10 ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த விலைக்குறைப்பு, நாளை (நவ.4) முதல் அமலுக்கு வருகிறது.

இந்த அறிவிப்பின்படி, மாநில அரசுகள் பெட்ரோல், டீசலை விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்கள், விவசாயிகளுக்கு விலை குறைப்பு நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று (நவ.3) பெட்ரோல் லிட்டர் ரூ.106.66ஆகவும், டீசல் லிட்டர் ரூ.102.59ஆகவும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திடீரென விஜய் சேதுபதியை எட்டி உதைத்த நபர்!

ABOUT THE AUTHOR

...view details