லக்னோ: பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் வருகிற மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முயற்சித்துவருகின்றன.
இந்நிலையில் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாயாவதியை மறைமுகமாக தாக்கி பேசினார். ஒரு கட்டத்தில் மாயாவதி தோல்வி பயத்தில் எந்தப் பொதுக்கூட்டமும் நடத்துவதில்லை, தோல்வி பயத்தில் அஞ்சி நடுக்கிறார்” எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையில் இன்று (ஜன.1)லக்னோவில் மாயாவதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “காங்கிரஸோ, பாஜகவோ மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஆட்சியில் இருக்கும்போது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு தேர்தல் பொதுக்கூட்டம், பேரணிக்கு பெரும் செலவு செய்வார்கள்.