புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புதுச்சேரியில் அதிஷ்டவசமாக இதுவரை ஒமைக்கரான் தொற்று இல்லை. ஆனால் நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது.
அண்டை மாநிலமான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிள்ளது. ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவது சம்மந்தமாக மாநில அரசும், முதலமைச்சர் ரங்கசாமியும் எடுத்த முடிவு மிகவும் தவறானது.
அண்டை மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதால் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் அதிகளவில் குவிந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாடுவதன் மூலம் புதுச்சேரியில் ஒமைக்ரான் வேகமாக பரவும், கரோனாவும் அதிகரிக்கும். இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் புதுச்சேரி மாநில மக்கள் தான். ஆகவே நாமே கதவுகளை திறந்துவிடக்கூடாது" என்றார்.
மேலும் அவர், முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இல்லையென்றால் புதுச்சேரி மாநிலத்தில் ஒமைக்ரான் வந்தால் அதன் முழு பொறுப்பும் ரங்கசாமியையே சாரும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:Omicron Spreads: இரவு நேர ஊரடங்கு நடைமுறை