தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பவன் குமார் பன்சால் நியமனம் - அகமது பட்டேல் மறைவு

முன்னாள் மத்திய அமைச்சரான பவன் குமார் பன்சாலை காங்கிரசின் புதிய பொருளாளராக, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

Pawan Bansal
Pawan Bansal

By

Published : Nov 28, 2020, 6:02 PM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான அகமது பட்டேல் கோவிட்-19 பாதிப்பின் காரணமாக கடந்த 25ஆம் தேதி உயிரிழந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நிழலாகத் திகழ்ந்த அவர், அகில இந்திய காங்கிரசின் பொருளாளர் பதவியில் இருந்தார்.

இந்நிலையில், அவரின் மறைவையடுத்து இந்தப் பொறுப்பு தற்போது பவன் குமார் பன்சாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரான பவன் குமார் பன்சாலை கட்சியின் புதிய பொருளாளராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

தற்போதைய பொறுப்புகளுடன் கூடுதலாக அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பன்சால், மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

இது இடைக்கால நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் எனவும் அதில் முக்கிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:இந்தியாவிற்கு குவியும் அந்நிய நேரடி முதலீடு: முதலிடத்தில் மொரீஷியஸ்

ABOUT THE AUTHOR

...view details