தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்ன கொடுமை சார் இது... கார்கில் போர் வீரருக்கு குடியுரிமையை நிரூபிக்கக்கோரி நோட்டீஸ்! - National Register of Citizens

இந்திய ராணுவத்தில் 28ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் வீரரை, இந்திய குடியுரிமை பெற்றவருக்கான ஆதாரங்கள் மற்றும் சான்றிதழ்களை சமர்பிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர்
முன்னாள் ராணுவ வீரர்

By

Published : Jan 6, 2023, 7:53 PM IST

பார்பெட்டா(அசாம்):அசாம் மாநிலம், பார்பெட்டா பகுதியைச் சேர்ந்தவர், அப்துல் ஹமீத். இந்திய ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றியவர். கார்கில் போரில் கலந்து கொண்டு இந்திய வெற்றிக்காக போராடிய வீரர்களில் அப்துல் ஹமீதும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அப்துல் ஹமீது. தன் சொந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அவரை இந்திய குடிமகன் என்பதற்கான ஆதாரங்களை சமர்பிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து வருபவர்கள் வெளிநாட்டு தீர்ப்பாயத்தால் சந்தேகத்திற்குரிய குடிமகன் என வகைப்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில் அப்துல் ஹமீதையும் சந்தேகத்திற்குரிய குடிமகன் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக பார்பெட்டா எல்லை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், குடியுரிமை சான்றுகளை சமர்பிக்கக்கோரி பார்பெட்டா வெளிநாட்டினர் தீர்ப்பாயம், அப்துல் ஹமீத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்திய குடிமகனுக்கான ஆதாரங்களை அப்துல் ஹமீது நிரூபிக்கத்தவறும் பட்சத்தில் அவர் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர் வெளிநாட்டினர் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தேசிய ஒதுக்கீட்டில் நிரம்பாத மருத்துவ இடங்களை தமிழ்நாட்டிற்கு வழங்குக: அமைச்சர் மா.சு வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details