புதுச்சேரி : ரங்கசாமி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் ஜன.1இல் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, எல்லா வளமும் பெற்று மாநில மக்கள் இன்புற்று வாழவேண்டும் என அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புத்தாண்டு கொண்டாட்டத்தில் புதுச்சேரி அரசும் சுகாதாரத் துறையும் நீதி மன்ற உத்தரவை பின்பற்றவில்லை, கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று புதுச்சேரியில் இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.