பெங்களூரு:கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனுமான எச்.டி.குமாரசாமியின் வீட்டில் மின் விளக்குகளை ஒளிர விட அத்துமீறி மின் கம்பத்திலிருந்து மின்சாரத்தைத் திருடியதாகக் கர்நாடகா காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.
இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் அதன் X சமூக வலைத்தள பக்கத்தில், “எச்.டி. குமாரசாமி, க்ரிஹஜோதி திட்டத்தில் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாகக் கொடுக்கிறது எங்கள் அரசு. அவ்வளவு ஆசையாக இருந்தால், நீங்கள் க்ரிஹஜோதி யோஜனாவுக்கு விண்ணப்பித்திருக்கலாம். ஆனால், க்ரிஹஜோதியில் ஒரு மீட்டர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது தெரியவில்லையா? உங்கள் பெயரில் தான் பல மீட்டர்கள் உள்ளதே கர்நாடகம் இருட்டில் இருக்கிறது என்று ஊடக சந்திப்பு நடத்துகிறீர்களே, இப்போது உங்கள் வீட்டில் திருட்டு மின்சாரத்தில் விளக்கு எரிகிறது. உங்கள் வீடு இப்படி ஜொலிக்கும் போது கர்நாடகா இருளில் மூழ்கியது போல எப்படிச் சொல்வீர்கள்? உங்கள் வீட்டில் விளக்கேற்ற விவசாயிகளிடமிருந்து மின்சாரத்தைத் திருடுவதை நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களா?” என காங்கிரஸ் கடுமையாக சாடி இருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் எச்.டி.குமாரசாமி அவரது X சமூக வலைத்தள பக்கத்தில், “தீபாவளி பண்டிகைக்கு எனது வீட்டை மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணியை மேற்கொண்ட தனியார் டெக்கரேட்டர், வீட்டை மின் விளக்குகளால் அலங்கரித்துவிட்டு, அருகிலிருந்த மின்கம்பத்தில் மின்சாரம் இணைத்து சோதனை செய்தார்.