தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மரணம்... விபத்தின் முதல் காட்சிகள் ஈடிவி பாரத்தில்... - சைரஸ் மிஸ்திரி

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சைரஸ் மிஸ்திரி மரணம்
சைரஸ் மிஸ்திரி மரணம்

By

Published : Sep 4, 2022, 4:43 PM IST

Updated : Sep 4, 2022, 6:13 PM IST

மும்பை:டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பை அருகே கார் விபத்தில் உயிரிழந்தார். 54 வயதை எட்டிய மிஸ்திரி இன்று(செப்.4) அஹமதாபாத்திலிருந்து மும்பைக்கு தனது உயர்ரக காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சூர்யா நதிக்கரையின் மேல் உள்ள பாலத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, சரியாக மாலை 3:15 நேர அளவில் எதிரே வந்த கார் மோதியதில், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான்கிர் தின்ஷா பண்டோல் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தரியஸ் பண்டோல், அனயாதா பண்டோல் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

FIRST ON: டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மரணம்

இதனையடுத்து, மிஸ்திரியின் உடல் உடற்கூராய்விற்காக கசா கிராம மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேட்டதும், சமூகவலைதளங்களில் அதிர்ச்சியடைந்த பலரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், இந்த அதிர்ச்சி செய்தியைக் கேட்டதும் பிரதமர் நரேந்திர மோடி, ’நம்பகத்தகமான வர்த்தகத் தலைவர்’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த சைரஸ் மிஸ்திரியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு நம்பகத்தனமான வர்த்தகத் தலைவர். இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகளின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். இவரின் மறைவு வர்த்தக மற்றும் தொழில் நிறுவன உலகிற்கு மிகப் பெரும் இழப்பு. அன்னாரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மரணம்... விபத்தின் முதல் காட்சிகள் ஈடிவி பாரத்தில்...

Last Updated : Sep 4, 2022, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details