மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாய், ஒன்றிய அரசு சார்பில் தனக்கு விடுக்கப்பட்டிருந்த விளக்க நோட்டீசுக்குப் பதிலளித்துள்ளார். அதில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படியே தான் செயல்பட்டதாகவும், அதன் காரணமாகவே மே 28ஆம் தேதி நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடித் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மே 28ஆம் தேதி, யாஸ் புயல் பாதிப்பு தொடர்பாக மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அன்றையத் தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் பங்கேற்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பவே, இதற்கு விளக்கம் அளிக்கக் கோரி அலபன் பந்தோபாத்யாய்க்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் விடுத்தது. மேலும், அவரை ஒன்றியப் பணிக்குத் திரும்பக் கோரி உத்தரவிட்டது.