சென்னை: EVOCHEF என்ற ஸ்மார்ட் கிச்சன் ஆட்டோமேஷன் நிறுவனம்தான் இந்த ‘EC FLIP' என்ற ஸ்மார்ட் தோசை மேக்கரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் தோசையை தயார் செய்வதான் மூலம், நேர விரயம் குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எந்திரத்தினுள் தேவையான மாவை வைத்து, பட்டனை பிரஸ் செய்தால் போதும் சில நொடிகளில் தோசை வந்துவிடும். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை வட்ட வடிவில் மட்டுமே தயார் செய்து சாப்பிட்டு வந்த தோசையை, இனி செவ்வக வடிவில் தயார் செய்யலாம்.
இதற்காக பிரத்யேக அச்சு பிளேட்கள் ஸ்மார்ட் தோசை மேக்கரான EC FLIPஇல் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சாதாரணமான அரிசி மாவு மட்டுமின்றி, தானியங்கள், ஓட்ஸ், ரவை, கோதுமை போன்ற மாவுகளையும், சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட காய்கறிகளையும் இணைத்தே தோசையை தயார் செய்யலாம்.