தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போடோ ஒப்பந்தம் 2022-க்குள் நிறைவேற்றப்படும் - அமித் ஷா திட்டவட்டம் - அசாமில் தேர்தல் பரப்புரை

போடோ ஒப்பந்தத்தின் அனைத்து வாக்குறுதிகளும் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

Amit Shah
Amit Shah

By

Published : Mar 31, 2021, 7:21 PM IST

அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. மூன்றாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பரப்புரையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுவருகிறார்.

அங்குள்ள சிராங் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "அடுத்த ஐந்தாண்டுகளில் அஸ்ஸாமை வெள்ள பாதிப்பற்ற மாநிலமாக மாற்ற பாஜக உறுதிபூண்டுள்ளது.

பிரிவினை சக்திகளுடன் கைக்கோத்துள்ள ராகுல் காந்தி அஸ்ஸாமிற்குச் சுற்றுலா பயணிபோல் வந்துசெல்கிறார். ஏற்கனவே உறுதி அளித்துள்ளதுபோல 2022ஆம் ஆண்டுக்குள் போடோலாந்து அமைதி ஒப்பந்தத்தின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:பாஜகவுக்கு எதிராக 'ஒன்றிணைவோம் வா' - எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

ABOUT THE AUTHOR

...view details