தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - மநீம முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைப் பார்க்கலாம்

ETVBharatNewsToday
ETVBharatNewsToday

By

Published : Mar 10, 2021, 7:11 AM IST

குடியரசுத் தலைவரின் இன்றைய பயணம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். இன்று காலை சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார். அங்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

மு.க.ஸ்டாலின்

மக்கள் நீதி மய்யம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

பட்ஜெட் தொடர்: 3ஆவது நாள்

நாடாளுமன்றத்தில் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மூன்றாம் நாளாக இன்று நடைபெறுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து எதிர்கட்சிகள் அமலியில் ஈடுபட்டதால் கடந்த இரண்டு நாள்களாக நாடாளுமன்றம் முழுவதுமாக முடங்கியது.

நாடாளுமன்றம்

திருநள்ளாறு நாட்டியாஞ்சலி விழா

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை ஒட்டி இன்று மாலை 5.30 மணிக்கு 16ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் புதுச்சேரி, காரைக்கால், சென்னையை சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில்

ABOUT THE AUTHOR

...view details