நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர்
இரண்டாம் கட்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் நாள் அமர்வு இன்று தொடர்ந்து நடைபெறுகிறது.
குடியரசு தலைவர் சென்னை வருகை
தமிழ்நாட்டில் மூன்று நாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்.
கோவையில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்
கேரளாவிலிருந்து கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இ-பாஸ் அனுமதி கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அறிவித்துள்ளார். கேரளாவில் கரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து இக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.