தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

7PM
7PM

By

Published : Oct 12, 2021, 7:22 PM IST

1. காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது - அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வு நடைபெறாது எனவும், அதற்கு பதிலாக பொதுத் தேர்வுக்கு முன்னதாக டிசம்பர் மாதம் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2.உளுந்து, பச்சைப்பயிறு விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல்

சென்னை: உளுந்து, பச்சைப்பயிறு விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு எடுக்கட்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

விஜயதசமி நாளன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு எடுக்கட்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

4. விஜயதசமியில் கோயில்கள் திறப்பு? முதலமைச்சர் நாளை ஆலோசனை

விஜயதசமி உள்ளிட்ட பண்டிகளை நாள்களில் கோயில்களை திறப்பது குறித்தும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை(அக்.13) ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. கொன்று புதைக்கப்பட்ட இளைஞரின் உடல்... பல நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டது... நடந்தது என்ன ?

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

6. காதல் திருமணம் செய்த பெண்ணைத் தூக்கிய பெற்றோர் - சினிமா காட்சிகளை மிஞ்சும் வீடியோ

நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்ய சென்ற மகளை சினிமா பாணியில் பெண்ணின் தந்தை இழுத்துச் சென்று காரில் ஏற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

7. குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை

இரண்டு முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

8. வேலூரில் வாக்கு எண்ணும் மையம் அருகே போக்குவரத்து நெரிசல்

வேலூர் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை மையமான தந்தை பெரியார் பல்தொழில்நுட்பக் கல்லூரி பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9. சிரஞ்சீவி என்னைத் தேர்தலில் இருந்து விலகச் சென்னார் - நடிகர் விஷ்ணு மஞ்சு

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலில் இருந்து தான் விலகுமாறு சிரஞ்சீவி கூறியதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார்.

10.ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளர் காலமானார்

ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளரும், தயாரிப்பாளருமான மகேஷ் கொனேரு இன்று (அக்.12) மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

ABOUT THE AUTHOR

...view details