தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - latest tamil news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

7AM
7AM

By

Published : Oct 22, 2021, 6:57 AM IST

1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று விழுக்காடு அகவிலைப்படி உயர்வு என்ற அறிவிப்பை ஒன்றிய அமைச்சரவை வெளியிட்டுள்ளது.

2. கரோனாவிற்கு எதிராக 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் புதிய மருந்து!

அஸ்ட்ராஜெனெகாவின் புதிய ஆன்டிபாடி மருந்து கரோனாவிற்கு எதிராக 18 மாதங்கள் வரை பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

3.இரிடியம் மோசடி - காவல் துறை விசாரணை

கோயம்புத்தூரில் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாக கூறி, நூதன முறையில் பணம் மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

4. மளிகைக் கடையில் பெண்ணிடம் செயின் பறிப்பு- சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

கோயம்புத்தூரில் மளிகைக் கடையில் தனியாக இருந்த கடைக்காரப் பெண்ணிடம் செயினை பறித்துச்சென்ற கொள்ளையனை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் உதவிகளுடன் தேடி வருகின்றனர்.

5. 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது மன நிறைவு தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நூறு கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது ஓரளவுக்கு மன நிறைவு கொள்ளுகின்ற விஷயம் தான் என கிருஷ்ணகிரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

6. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

7. அறிவியலை பிராந்திய மொழிகளில் வளர்க்க நடந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறை!

அறிவியலை பிராந்திய மொழிகளில் வளர்க்க, விக்யான் பிரசார் அமைப்பு சார்பாக ஒரு நாள் பயிற்சிப்பட்டறை டெல்லியில் நேற்று நடந்துள்ளது.

8. TRUTH Social - புதிய சமூக வலைதளம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் ட்ரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோசியல்' (TRUTH Social) என்ற புதிய சமூக வலைதளம் ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

9. ஐந்து லட்சம் கோடி டாலர் இலக்கை நோக்கி இந்தியப் பொருளாதாரம் - அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் ஐந்து லட்சம் கோடி டாலர் இலக்கை நோக்கி இந்தியப் பொருளாதாரம் 2024-25ஆம் ஆண்டு அடையும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

10. 'விக்ரம் வேதா' வரலாற்றில் இடம் பிடிக்கும் - நடிகர் மாதவன்

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் படம் வரலாற்றில் இடம் பிடிக்கும் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details