தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM - 5pm news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

5PM
5PM

By

Published : Oct 9, 2021, 5:39 PM IST

1.கவிஞர் பிறைசூடன் மறைவு - மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கவிஞர் பிறைசூடன் நேற்று மாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

2. சுயேச்சை வேட்பாளர் தயாரித்த உணவில் மண் அள்ளிப்போட்ட போலீசார்!

திருநெல்வேலி மாவட்டத்தில் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்காக தயார் செய்த உணவை காவல்துறையினர் மண்ணில் கொட்டியுள்ளனர்.

3.ஓடும் ரயிலில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; 8 பேர் கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஓடும் ரயிலில் கொள்ளையில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

4. குஜராத் ஹெராயின் கடத்தல் வழக்கு: சென்னையில் என்ஐஏ அதிரடி ரெய்டு

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல் வழியாக போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட மச்சாவரம் சுதாகர் என்பவரது வீடு, வாகனங்களில் தேசிய புலான்யவு முகமை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

5. 24 மணி நேரத்தில் 80 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 80 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

6.மகன் செய்த லீலையால் ஷாருக் கானுக்கு ஏற்பட்ட சோகம்

போதைப்பொருள் விவகாரத்தில் மகன் கைதாகியதால் தந்தை ஷாருக் கானின் விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

7. நவம்பரில் பள்ளிகள் திறப்பு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி; ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளன.

8. சமந்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள்

நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்து தவறாக பேசுபவர்களுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நிலையில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

9. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி - இரண்டு ஆசிரியைகள் கைது

தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 5 லட்சம் மோசடி செய்த, இரண்டு அரசுப்பள்ளி ஆசிரியைகளை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

10.சிவகார்த்திகேயனுக்குக் கடைசி நேரத்தில் உதவிய லைகா!

டாக்டர் படம் வெளியாகுவதில் சிக்கல் எழுந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்காக லைகா நிறுவனம் உதவியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details