தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 23, 2021, 10:56 AM IST

ETV Bharat / bharat

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @11 AM

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

11 AM
11 AM

1. 3000 கிலோ ஹெராயின் விவகாரம்: மேலும் 6 பேர் கைது

3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் வழக்குத் தொடர்பாக இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

2.சர்வதேச சைகை மொழி தினம்: மனிதனின் முதல் மொழி சைகை

மனிதன் மற்றொரு மனிதனோடு தனது எண்ணத்தைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்திய முதல் மொழி சைகை.

3. கிராம பஞ்சாயத்தைப் பொதுப் பிரிவினருக்கு அறிவிக்கக் கோரி வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அரசமலை கிராம பஞ்சாயத்தை பொதுப் பிரிவினருக்காக அறிவிக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

4. டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (செப்டம்பர் 23) காலை டெல்லி புறப்பட்டார். அங்கு மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5. அமெரிக்கா சென்ற நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

ஐநா சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற மோடிக்கு அந்நாட்டு உயர் அலுவலர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

6. 'ஏ.கே. ராஜன் குழுவுக்கு நீட் குறித்த எந்தப் புரிதலும் இல்லை'

ஏ.கே. ராஜனின் குழுவுக்கு நீட் குறித்த எந்தப் புரிதலும் இல்லை என்பது அவர்களின் அறிக்கை வாயிலாகத் தெரியவருவதாகக் குறிப்பிட்ட இ. பாலகுருசாமி, இதனடிப்படையில் நீட்டுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவந்திருப்பது கெடுவாய்ப்பாகும் என வேதனை தெரிவித்தார்.

7.முதலமைச்சரின் நிலைப்பாடுதான் எங்களது நிலைப்பாடு - நிர்மல் குமார் சுராணா

புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக முதலமைச்சரின் நிலைப்பாடே தங்கள் நிலைப்பாடு என பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுராணா தெரிவித்துள்ளார்.

8. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாது - தமிழ்நாடு அரசு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதைத் தவிர வேறெந்த தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

9. என்றும் முதலிட மகாராணி மிதாலி ராஜ்!

ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டியின் பேட்டர்கள் தரவரிசையில், மிதாலி ராஜ் 762 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

10. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா

நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய வெப் சீரிஸிஸ் ரெஜினா கசாண்ட்ரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details