ஹைதராபாத்: ஈடிவி நெட்வொர்க்கின் பால் பாரத் 11 இந்திய மொழிகளில் குழந்தைகளுக்கான ஒரு பூங்கொத்து போன்று குழந்தைகளைச் சென்றடைகிறது. தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் லட்சக்கணக்கான குழந்தைகளை அவர்களின் சொந்த மொழியில் சென்றடையும் நோக்குடன் உள்ளது ஈடிவி பாலபாரத்.
ஈடிவி பாலபாரத் தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும மலையாள மொழிகளில் தனி சேனலாக உள்ளது. 'ஈடிவி பால பாரத் HD' மற்றும் 'ஈடிவி பாலபாரத் SD' என இருவடிவில் கிடைக்கிறது. SC மற்றும் HD சேனல்கள் ஆங்கிலம் மற்றும் 11 பிராந்திய மொழிகளில் மாற்றம் செய்யும் விதத்தில் உள்ளன.
குழந்தைகள் காண்பதை கருத்தில் கொண்டு சிரத்தையுடன் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சாகசங்கள், நகைச்சுவை, வரலாறு, புனைக் கதைகள், பேண்டசி கதாப்பாத்திரங்கள் என ஈ-டிவி பால் பாரத் சேனலில் குழந்தைகளைக் கவரும் வகையிலும் அதேநேரம் நகைச்சுவையுடன் நன்னெறிக் கருத்துகளைப் போதிக்கும் வகையிலான காமிக்ஸ் உள்ளிட்ட கதைகளும் ஒளிபரப்பாகின்றன.
குழந்தைகளுக்காக என பிரத்யேக உள்ளடக்கங்களைக் கொண்டும் சர்வதேச அளவில் இதுவரை கண்டிராத அளவிலுமான கதைகள், கார்டூன்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்திய கலாச்சாரத்தின் மதிப்பு நெருங்கும் அடிப்படையிலான பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான கருத்துகளை ஈ-டிவி பால் பாரத் சேனல் வெளியிட்டு வருகிறது.
கோடைக் கால சிறப்பு நிகழ்ச்சிகள்
கோடைக்கால சிறப்பு நிகழ்ச்சிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்குகின்றன. பால் பாரத்தின் அனைத்து சேனல்களும் உள்நாட்டு சர்வதேச தயாரிப்புகளான புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. சாகசம் மற்றும் ஆகஷ்ன் பிரியர்களுக்காக 'Dennis and Gnasher', சிறு பாலர்களுக்காக 'Baby Shark'. நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கிற்காக ‘SPONGEBOB SQUAREPANTS' போன்ற புதிய தொடர்கள் வர உள்ளன.
புதுவரவுகள் தவிரவும், சேனலில் ஏற்கெனவே ஓடிக் கொண்டிருக்கும் டாப் 3 புரோகிராம்களான, பெண்களை மையப்படுத்திய ‘THE SISTERS’ , கிளாசிக் சாகச தொடரான ‘THE JUNGLE BOOK’ மற்றும் ஈடிவி பால் பாரத்தின் சொந்த சூப்பர் ஹரோ தயாரிப்பான ‘PANDEYJI PEHELWAN’ உள்ளிட்டவையும் உள்ளன.