தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : Aug 16, 2021, 10:51 AM IST

1.கார்கில் நாயகன் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

2. ரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே வெளியேறினேன்- ஆப்கான் அதிபர் விளக்கம்

ரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே வெளியேறியதாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

3.'பவானிசாகரில் நுண்ணுயிர்ப் பாசனத்திட்டம் குறித்து உழவர்களிடம் கலந்துபேசி முடிவு'

பவானிசாகர் பகுதியில் நுண்ணுயிர்ப் பாசனத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து உழவர்களிடம் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

4.சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் விவாதம்

கடந்த வாரம் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று சட்டப்பேரவையில் அதன் மீதான விவாதம் தொடங்குகிறது.

5.ஹரி படத்தில் இணைந்த கங்கை அமரன்!

சென்னை: அருண் விஜய்யை வைத்து ஹரி இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் கங்கை அமரன் இணைந்துள்ளார்.

6.19 வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட விடுதலை வேங்கை குதிராம் போஸ்

தனது 19ஆம் வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸின் தியாக வரலாறு குறித்த செய்தித் தொகுப்பு.

7.'அதிமுகவின் 3ஆவது தலைமுறையே' - சசிகலா ஆதரவு சுவரொட்டிகளால் பரபரப்பு

ஆகஸ்ட் 18இல் பிறந்தநாள் காணும் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

8.தாலிபன் தாக்குதல்: விமான நிலையத்துக்கு மாறிய அமெரிக்க தூதரகம்

தொடர் தாலிபன் தாக்குதல் காரணமாக காபூல் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக நகர விமான நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

9.கொல்கத்தா: ரூ. 55 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

கொல்கத்தாவில் ரூ. 55 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10. சமூக வலைதளங்களில் ஏன் கணக்கு இல்லை? - நயன்தாரா விளக்கம்

நடிகை நயன்தாரா, தான் ஏன் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது இல்லை என முதல்முறையாகத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details