தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு #ETV Bharat News Today - news today

ஆகஸ்ட் 24ஆம் தேதியின் நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

etv-bharat-tamil-news-today
etv-bharat-tamil-news-today

By

Published : Aug 24, 2021, 7:09 AM IST

  • ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜி-7 நாடுகள் இன்று ஆலோசனை

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இன்று (ஆகஸ்ட் 24) ஜி-7 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
  • டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள், இன்று (ஆகஸ்ட் 24) தொடங்குகின்றன. தடகளம், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான விளையாட்டுகளில், 54 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய அணியின் கேப்டனாக தேசியக் கொடியை ஏந்தி இன்று அணிவகுத்துச் செல்ல உள்ளார்.

ஒலிம்பிக் வீரர் மாரியப்பன்
  • பொறியியல் இளநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

தமிழ்நாட்டில் பொறியியல், தொழில்நுட்ப இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் ஜூலை 26ஆம் தேதிமுதல் பெறப்பட்டுவந்தன. அத்துடன் சான்றிதழ்கள் பதிவேற்றமும் நடைபெற்றுவந்தது. இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி நாள் இன்று.

பொறியியல் மாணவர்கள்
  • உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை இன்று

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்திற்கு பதிலளிக்கும் துறையின் அமைச்சர்கள் கே.என். நேரு, பெரியகருப்பன் அதன் மீது புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவர்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன்

ABOUT THE AUTHOR

...view details