தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஜன.5ஆம் வார ராசிபலன்.. எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது.? - கும்பம் வார ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஜனவரி மாதத்தின் 5ஆம் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரையிலானவை.

வார ராசிபலன்
வார ராசிபலன்

By

Published : Jan 29, 2023, 6:46 AM IST

மேஷம்: இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையின் அணுகுமுறை அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம், மேலும் அதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரம் ஆகலாம். உங்கள் மனைவி உங்களிடம் ஏதாவது செய்யச் சொன்னால், அதற்குத் தயாராக இருங்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் உறவில் அன்பு அதிகரிக்கும். இப்போது உங்கள் வருமானம் கூடும். நீங்கள் எதிர்கொள்ளும் நிதி சவால்களில் இருந்து விடுபட வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள், வாழ்க்கையில் வெற்றியை அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அவர்கள் படிப்பில் ஆர்வத்தை காட்டுவார்கள். மேலும் அவர்களால் சிறப்பாகச் சாதிக்க முடியும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும், இதன் காரணமாக நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்கள் ஜிம்மிங் மற்றும் பயணத்திற்காக நிறைய பணம் செலவழிக்கலாம் மற்றும் இதற்காக நேரத்தை செலவிடலாம். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்: வாரத் தொடக்கத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் திருப்தி இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கலாம். உங்களுக்கு மரியாதை கூடும். உங்கள் மனதில் ஏதாவது ஒரு சுமை இருக்கலாம், மேலும் வேலையின் அழுத்தமும் இருக்கலாம். வேலை செய்பவர்கள் வேலைகளில் அக்கறை செலுத்துங்கள், இல்லையெனில், யாராவது உங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறரிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பேச வேண்டாம். இப்போது உங்கள் வருமானம் அதிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. மேலதிகாரியும் உங்கள் வேலையால் ஈர்க்கப்படலாம். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொலைதூர மாநிலங்களில் உள்ள தொடர்புகளின் மூலம் பலனைப் பெறலாம். உங்கள் எதிரிகளிடமிருந்து கவனமாக இருங்கள். இந்த வாரத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். ஆர்வமாக படியுங்கள். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வார ஆரம்பம் தவிர மற்ற நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம்: இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடனான உங்கள் உறவு மிகவும் நன்றாக இருக்கும். இது வீட்டின் சூழ்நிலையை நேர்மறையாகவும் மாற்றும். காதலிப்பவர்கள் வாரத் தொடக்கத்தில் சில நல்ல பலன்களைப் பெறலாம், மேலும் உங்கள் காதலி சில வேலைகளைச் செய்ய உங்களைத் தூண்டலாம். வாரத் தொடக்கத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் எப்போது உங்களுடன் இருக்கு, இதன் காரணமாக தடைபட்ட வேலைகளும் முடிக்கப்படலாம். நீங்கள் வேலையை மாற்றலாம். இந்த வாரத்தில், பதவியுடன், கௌரவத்தையும் பெறலாம். உங்கள் அனுபவத்தின் மூலம், நீங்கள் நல்ல நிலையைக்கு வருவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் கூட்டாளியின் முழு ஆதரவையும் நீங்கள் பெறலாம், மேலும் நீங்கள் அனைவரும் சேர்ந்து உங்கள் வியாபார வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கலாம். இனிவரும் காலங்களில் அதன் முடிவுகளை நீங்கள் பார்க்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். தொழில்நுட்ப மற்றும் அரை தொழில்நுட்ப பாடங்களை படிக்கும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட முடியும். இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வார முதல் இரண்டு நாட்கள் மட்டுமே பயணத்திற்கு ஏற்றது.

கடகம்: இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். இருப்பினும், திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, விட்டுக் கொடுப்பதன் மூலம் பிரச்னைகளை சமாளிக்க முடியும். கிரகங்களின் நிலை காரணமாக, உங்கள் உறவில் பதற்றம் அதிகரிக்கலாம், எனவே கவனமாக இருங்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஒருவருக்கொருவர் மீது அன்பு அதிகரிக்கும், அதனால் உங்கள் உறவில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இந்த வாரம் உங்கள் துணைக்கு நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும், மேலும் நீங்கள் வலுவான நிலைக்கு வரலாம். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்படி செய்தால் மட்டுமே வேலையில் வெற்றி பெற முடியும். வியாபாரிகள் இந்த வாரம் வெற்றியை அடைவார்கள். சில பெரிய மற்றும் வலிமையான நபர்களைச் சந்திப்பதன் மூலம் நீங்கள் பலன்களைப் பெறலாம். அவர்களுடன் கைகோர்ப்பதன் மூலம், நீங்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். ஒரு பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். கவனமாக படித்தால் நல்ல பலனை பெறலாம். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்னைகள் வரலாம். எந்த பிரச்னையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெறவும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

சிம்மம்: இந்த வாரம் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர்கள் ஒருவருக்கொருவரிடம் நேரத்தை செலவிடுவதன் மூலம், அன்பு அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். அவர்களுக்கிடையேயான தொடர்பு நன்றாக இருக்கலாம், மேலும் அவர்கள் ஒருவரையொருவரிடம் உள்ள அன்பை புரிந்துக் கொள்வார்கள். இது உறவை வலுப்படுத்தவும் வாய்ப்புள்ளது. இப்போது நீங்கள் உங்கள் வேலையை மாற்ற முயற்சி செய்யலாம், அதில் நீங்கள் ஓரளவு வெற்றி பெறலாம். உங்கள் வியாபாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல, நண்பர்களின் உதவியை நீங்கள் பெற முயற்சி செய்யலாம். இது உங்களுக்கு நிறைய பயனளிக்கலாம். அரசுத் துறையிலும் நல்ல லாபம் கிடைக்கும். நீதிமன்ற விஷயாங்களில் வெற்றி கிடைக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இதன் மூலம், உங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறலாம். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வாரக் கடைசி இரண்டு நாட்களைத் தவிர, மீதமுள்ள நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கன்னி:இந்த வாரம் கலவையாக பலனை தரும் வாரமாக அமையும். நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் பொறுப்புகளும், சுமைகளும் அதிகரிப்பதாக உணரலாம். இதற்காக, நீங்கள் சில தனி ஏற்பாடுகளை செய்யலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சற்று பலவீனமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம், அதனால் மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். கடினமாக உழைத்தால் நல்ல பலனை பெறலாம். இதனால் சக ஊழியார்கள் உங்கள் வேலையை பாராட்டலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் நல்ல லாபம் வரலாம். உங்கள் கடின உழைப்பினால், நீங்கள் வெற்றி பெறலாம். மாணவர்கள் இப்போது படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். சிறந்து விளங்கினால் நல்ல பலனை பெறலாம். இந்த வாரம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் வெளி உணவுகளை தவிர்க்கவும். வார ஆரம்பம் மற்றும் கடைசி நாள் தவிர மற்ற நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

துலாம்:இந்த வாரம் நன்றாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து நீண்ட தூரம் பயணத்தை மேற்க்கொள்ள திட்டமிடுவீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உறவில் அன்பு அதிகரிக்கும், நீங்கள் அதில் முற்றிலும் நேர்மையாக இருப்பீர்கள். வீட்டு வேலைகளில் வெற்றி கிடைக்கலாம். இருப்பினும், வீட்டு செலவுகள் அதிகரிக்கலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் உங்கள் செயல்திறன் நன்றாக இருக்கும், இதன் காரணமாக நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் மன உளைச்சல் காரணமாக சில பெரிய முடிவுகளை எடுக்க முடியாமல் போகலாம், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையைப் பெற்று நீங்கள் வேலை செய்யலாம். வரப்போகும் ஆண்டில் நீங்கள் முதலீட்டில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். அவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டினால் வெற்றியை பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலம். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.இருப்பினும், வயிற்று வலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் தொந்தரவு செய்யலாம். கவனமாக இருங்கள். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம்: இந்த வாரம் சுமாரான பலனைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்கள் ஒருவருக்கொருவரை புரிந்துக் கொண்டு சந்தோசமாக இருப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடலாம். நீங்கள் நடைபயிற்சி செல்லலாம் அல்லது ஷாப்பிங் செய்யலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் உங்கள் காதலியை அறிமுகப்படுத்துவீர்கள். வீட்டில் திருமணம் பற்றிய பேச்சும் கூட இருக்கலாம். வாரத் தொடக்கத்தில், நீங்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படுவீர்கள், ஏனென்றால் உங்கள் செலவுகள் இப்போது அதிகரிக்கக்கூடும். வருமானம் சற்று குறையும். மன அழுத்தம் உங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள், அதில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக அமையும். உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். இருப்பினும், ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீங்கள் அவர்களால் தொந்தரவை சந்திப்பீர்கள். மன உளைச்சல் அதிகரிக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் இப்போது மிகவும் கடினமாக படிக்க வேண்டியிருக்கு, கடினமாக படித்தால் நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தமும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். வாரக் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

தனுசு: இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சாதகமாக இருக்கும். வாழ்க்கை துணையின் மீது அன்பு அதிகரிக்கும், ஒருவரையொருவரை புரிந்துகொள்வீர்கள். காதலிப்பவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த வாரமாக அமையும். இப்போது நீங்கள் ஒருவரையொருவரை புரிந்து கொள்வதில் தவறு செய்யலாம். எனவே கவனமாக இருங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படலாம். சில தவறான நபர்களின் சகவாசம் உங்கள் வேலையைக் கெடுத்துவிடும், எனவே கவனமாக இருங்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களின் வேலையில் பலம் கூடும். உங்கள் வேலைக்கான பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். இப்போது நீங்கள் கடினமாக உழைத்தால், நல்ல முடிவுகளைப் பெறலாம். சமுதாயத்தில் நல்ல பார்வை இல்லாத சிலரின் சகவாசத்தை நீங்கள் பெறலாம், ஆனால் அவர்கள் உங்களுக்கு நல்லவர்களாக இருப்பார்கள். மாணவர்கள் இப்போது தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும், இல்லையெனில், படிப்பில் தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, கவனமாக இருங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்கவும். வார ஆரம்ப நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்: இந்த வாரம் சுமாரான பலனைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களுக்கு தங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் நிறைய நேரம் செலவிடுவீர்கள். வாரத் தொடக்கத்தில், வீட்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இதன் காரணமாக உங்களுக்கு சில மனக் கவலைகள் ஏற்படலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். அத்தகைய செலவுகளை பற்றி, நீங்கள் எந்த திட்டமிடலும் செய்திருக்க மாட்டீர்கள். மனதில் மத சிந்தனைகள் வர வாய்ப்புள்ளது. குழந்தையின் விஷயத்தில் சில கவலைகள் இருக்கலாம். தொழிலதிபர்கள் அரசாங்கத் துறையில் நல்ல பலன்களைப் பெறலாம் மற்றும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை செய்பவர்களுக்கு, இந்த வாரம் அவர்களின் திறமையைக் காட்டுவதற்கான வாரமாக இருக்கும். வார இறுதியில் உங்கள் உடல்நிலை மாற்றம் ஏற்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வார முதல் இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கும்பம்: இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சந்தோசம் நிறைந்திருக்கும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். காதலியுடன் பல மணிநேர பேச வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கிடையில் ஒரு சந்திப்பு கூட இருக்கலாம், அதனால் உங்கள் காதல் முன்னேற வாய்ப்புள்ளது. நீங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறலாம், இதன் காரணமாக நீங்கள் வேலையிலும் வெற்றியைப் பெறலாம். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் வலுவாக இருப்பீர்கள். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபார கூட்டாளருடனான உங்கள் உறவு மேம்படலாம். உங்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வார ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை பயணத்திற்கு ஏற்றது.

மீனம்: இந்த வாரம் மீன ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். இப்போது செலவுகள் அதிகரிக்கும். இதன் காரணமாக நீங்கள் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். நீங்கள் சில விலையுயர்ந்த கொள்முதல் செய்யலாம், அது செலவாகும். வேலை செய்பவர்கள் வேலை தொடர்பாக நிறைய ஓட வேண்டியிருக்கும். அதிலிருந்து நீங்கள் நல்ல பலன்களையும் பெறலாம். உங்கள் முதலாளியுடன் நெருக்கத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் அதிலிருந்து பயனடையலாம். பயணங்களால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவர்கள் படிப்பிற்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு உதவக்கூடும். உடல்நலம் நன்றாக இருக்கும், எந்த பிரச்னையும் வராது. இருப்பினும், நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

இதையும் படிங்க:TODAY HOROSCOPE: ஜனவரி 29ஆம் தேதிக்கான ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details