மேஷம்: இன்று, நீங்கள் தனியாக இருந்தால் கூட, உண்மையில் தனிமையாக உணரக்கூடாது. உங்களை மேலும் அதிக அளவு கற்பனையாக வெளிப்படுத்துவதற்காக உங்கள் உள்ளுணர்வைக் கேட்டு, நடக்க விரும்புவீர்கள், உங்கள் மௌனத்தையும் புரிந்துக் கொள்ளக்கூடிய அன்பானவர்களோடு மாலை நேரத்தை செலவிடுங்கள்.
ரிஷபம்: இன்று, உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் இயக்கப்படாமல், அதற்கு பதிலாக, நிதர்சனமான, புத்திசாலித்தனமான மனோபாவத்தை வளர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெருந்தன்மையுடனும் திறந்த மனதுடனும் இருக்க முயற்சிக்கவும். அது உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும்.
மிதுனம்: இன்று, உங்களின் வேலை மற்றும் குடும்பத்திற்கும் இடையே நேரத்தை சமமாக ஒதுக்கி சிறப்பாக செயல்படும் நாளாக அமையும். உங்கள் வேலைப் பளு அதிகம் இருந்த போதிலும்,குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவது உடன் சிறு பயணத்திற்கான ஏற்பாட்டினையும் செய்வீர்கள். இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேறும் நன்னாளாக அமைய பெறும்.
கடகம்: இன்று,உங்களின் மன ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் அவசியம்,இல்லைஎனில் உங்களின் அருகில் இருப்பவர்களே பாதிக்கக்கூடும். எழுத்தாளர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையப் பெறலாம்.கலைத்துறையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இன்று உகந்த நாளாக அமையும்.புது முயற்சிகள் செய்வதற்கு ஏற்ற நாளாக இந்நாள் அமையும்.
சிம்மம் இன்று உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய தருணமாக இருந்தால் அதற்கு ஆச்சரியப்பட வேண்டாம். இது சொந்த வாழ்க்கை அல்லது வேலை தொடர்பான முக்கிய விஷயத்தை கவனமாக கையாண்டு, நாசூக்காக செயல்படவேண்டும். நடுநிலைமையை கடைபிடியுங்கள்! இன்று சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயர்ந்து மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும் என்பது நிச்சயம்.
கன்னி: இன்று உங்கள் மனதில் யோசனைகள் பொங்கி வழியும். உங்கள் கடமைகளுடன், தற்போதைய வேலையை ஒப்பிட்டு குழம்புவீர்கள். புதிய தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது என்பதற்கு ஏற்ப, குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களுடம் மேலும் நெருக்கமாவார்கள்