மேஷம்:இன்று குழப்பாமான மனநிலையில் இருப்பீர்கள். எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம். அவை உங்களது நிலைமையை தலைகீழாக மாற்றிவிடலாம். அவை பல விஷயங்களை மதீப்பீடு செய்ய உதவும்.இதைத்தவிர, காலக்கெடுவை சமாளிக்க நீங்கள் சிரமப்படுவீர்கள். இருந்தாலும், உங்கள் வேலையின் முக்கியத்துவத்தைப் பற்றி பிறருக்கு எடுத்துச் சொல்லலாம்.
ரிஷபம்:உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்படலாம். நபர்களையும் பொருட்களையும் பற்றி இயல்பாகவே உணர்வுபூர்வமாக கருதுபவர். உங்கள் அதீத அணுகுமுறை யாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தாது. தவறுகளை நியாயப்படுத்தும் மனப்போக்கு, விஷயங்களை மோசமாக்கலாம். அவர்களின் நியாயமான கோபத்தை நீங்கள் புறக்கணிப்பீர்கள். விஷயங்களை சரியான முறையில் மாற்றியமைத்துக் கொள்வதற்கு பதிலாக பொருள் ஆதாயங்களின் பின் நீங்கள் ஓடுவீர்கள்.
மிதுனம்:குடும்பத்தினருடன் பயணம் செய்ய விரும்பும் ஆசை இன்று அதிகரிக்கும். உங்கள் பயணத்தை திட்டமிடுவீர்கள். பயணத்திற்கு உகந்த நேரம் இது. உங்கள் வரவு செலவு திட்டத்திற்குள் பயண திட்டங்களை திருப்திகரமாக நிறைவேற்ற முடியும்.
கடகம்: உங்கள் வேலைக்கு அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள். ஒப்படைக்கப்பட்ட பணியை விரைவாகவும், கவனமாகவும் முடிப்பீர்கள். வேலைக்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். வெளியே சென்று நண்பர்களை சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்: வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் இன்று அதிக சவால்களையும், போட்டியையும் சந்திக்க நேரிடும். நிதி இழப்புகள் ஏற்படும் சாத்தியங்களும் உண்டு. முதலீடுகள் செய்யவோ, ஊக வணிகம் செய்யவோ இன்று உகந்த நாள் அல்ல. பிறருடன் சூடான விவாதங்களைத் தவிர்க்கவும். இன்று உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் எச்சரிக்கை தேவை.
கன்னி:இன்று உங்களுக்கு திருப்புமுனையான முக்கியமான நாளாக அமையலாம். பிரகாசமான எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகளை இன்று நீங்கள் ஆராயலாம். உறவு தொடர்பான விஷயங்கள் உங்கள் முன்னுரிமை பட்டியலின் முதலிடத்தை பிடித்திருக்கும். ஆன்மீகம் நோக்கிய உள்முக சிந்தனைகள் ஏற்படலாம். தியானம் அல்லது யோகா மீது கவனம் திரும்பும்.
துலாம்:இன்று நீங்கள் வீரியம் மற்றும் உற்சாகம் நிறைந்த வித்தியாசமான நபராக இருப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் படைப்பு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் முன்னோக்கி செல்லவும் சந்தர்ப்பமும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வெளிநாட்டில் உயர் கல்வி பயில்வது தொடர்பாக நீங்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
விருச்சிகம்:உங்கள் விருப்பத்திற்குரிய பொருளை நோக்கி உங்கள் முழு ஆற்றல்களையும் திசைதிருப்புவதற்கான வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. ஆராய்ச்சி சார்ந்த பணி உங்களின் முக்கிய விருப்பமாக இருக்கும். உங்கள் பழைய இனிமையான நினைவுகளையும், அனுபவங்களையும் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு உள்ளது.
தனுசு:உங்களிடம் இருக்கும் அனைத்தும் சரியானதுதான், என்பதே இன்றைய உங்கள் நிலைப்பாடாக இருக்கும். அநீதி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக போராட நீங்கள் சரியான காரணம் உங்களிடம் இருக்கும். இன்றைய நாள் உங்கள் விருப்பப்படி பிரகாசமாக இருக்கும் என்று தெரிகிறது. இன்றைய தினம் நீங்கள் களத்தில் நின்று பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறோம்.
மகரம்: கடினமான சூழ்நிலையிலும், மன உறுதியை இழக்காமல் இருப்பது எப்போதும் நல்லது. உங்கள் இலக்கை அடைய அது உதவும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல்கள் உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்பதால், வாதிடுவதை தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் காதல் துணையுடன் மனம் திறந்து பேசி, உங்கள் வாழ்க்கையில் அவர்களின் முக்கியத்துவத்தை புரிய வைப்பீர்கள்.
கும்பம்: சில சமயங்களில், நீங்கள் எல்லாவற்றையும் அறிய அதீத விருப்பம் கொண்டிருப்பீர்கள். இன்றும் அதுபோன்ற ஒரு நாளே. நீங்கள் ஒரு தகுதிவாய்ந்த எதிரி என்பதையும் நிரூபிப்பீர்கள். உங்கள் எதிரிகளின் திட்டங்களை தெரிந்துக் கொள்வது, உங்களுடைய சொந்த நலனுக்கு நன்மை பயக்கும். இதற்கு நீங்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். குறிப்பாக கடுமையான சூழலில் உங்கள் வலிமையை நீங்கள் நிரூபிப்பீர்கள்.
மீனம்: நீங்கள் பணத்தை பெரிதாக மதிக்கமாட்டீர்கள். எதிர்காலத்திற்கான நிதி திட்டமிடல் என்பதும் உண்மையில் மிகவும் எளிதானது அல்ல. காலத்தை அதன் போக்கிலேயே எடுத்துக் கொள்ளும் நபர் நீங்கள். ஆனால், வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை, கவனமாக எடுக்க வேண்டிய காலகட்டம் இது. இறுதியாக உங்கள் நிதி தொடர்பான திட்டமிடல் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்துகொள்வீர்கள். இந்த அறிவுரையை புறக்கணிக்க வேண்டாம்.
WEEKLY HOROSCOPE... செப்டம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..?