தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: பிப்ரவரி 5ஆம் தேதிக்கான ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்ப்போம்.

ராசிபலன்
ராசிபலன்

By

Published : Feb 5, 2023, 6:43 AM IST

மேஷம்: இன்று, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடிப்பது நன்மை பயக்கும். புதிய உணவு ஏதேனும் சுவைத்துப் பார்க்க உங்களுக்கு விருப்பம் இருக்கும். நீங்கள் நெடுநாட்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழிப்பது பலன் தரும்.

ரிஷபம்: நீங்கள், இன்று உங்களது நெருங்கிய நண்பர்கள், குறிப்பாக உங்கள் எதிர் பாலினத்தை சேர்ந்த நண்பர்கள் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். திடீரென்று நீங்கள் காதல் வயப்பட்டு உள்ளதை உணர்வீர்கள். காதல் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், அச்சம் ஏதுமின்றி அதைப் பயன்படுத்திக் கொள்ளவும். விரைவில் உங்களுக்கு திருமண உறவு கைகூடும்.

மிதுனம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, வீட்டில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் அதிகரிக்கும். அதை சமாளிக்க முடியாமல் நீங்கள் திணறும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் மனநிலை பாதிக்கப்படலாம். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிக்க வேண்டும்.

கடகம்: நிதி நிலைமையை, புத்திசாலித்தனத்துடன் சமாளிப்பது நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் இரண்டிலும், முன்னேற்றமும் வெற்றியும் ஏற்படும். பணிகள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். எனினும் உங்களுக்கு ஆர்வமான விஷயங்களில் நீங்கள் நேரத்தை செலவழிப்பீர்கள்.

சிம்மம்: விற்பனைத்துறை மற்றும் மார்க்கெட்டிங் துறை தொடர்பான பணியில் இருப்பவர்கள், மேற்கொள்ளும் சந்திப்புகள் பலன் தரும். எனினும், பயணத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களிடமுள்ள திறமைகளை அறிந்துகொள்ள இது சரியான நேரமாகும். அடுத்த 2-3 நாட்களில், உங்களது திறமையை நிரூபிப்பீர்கள்.

கன்னி: தினசரி பணிகளிலிருந்து செல்வது விலகி, உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். சோர்வைத் தரும் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் பணிகளை மேற்கொள்ளவும். தனிப்பட்ட அல்லது சமூக அளவிலான சந்திப்புகளில் நீங்கள் கலந்து கொள்ளக் கூடும். மற்றவர்களுடன் கலந்து பழகுவது, உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

துலாம்: நீங்கள் உங்கள் குடும்பத்தின் மீதும், குடும்ப விவகாரங்களின் மீதும் கவனம் செலுத்துவீர்கள். வீட்டின் அலங்காரத்தை மாற்றி புதுப்பிக்க விருப்பம் இருக்கும். வீட்டிற்கான புதிய பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்: உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துகிறீர்கள். உங்களது உடல் நல பாதிப்பு காரணமாக, நீங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்க வழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.

தனுசு: இன்று உங்களுக்கு அனைத்து தரப்பிலும் வெற்றி கிடைக்கும். எந்த சவால்களை எடுத்துக் கொண்டாலும் நீங்கள் அதை வெற்றி கொள்வீர்கள். உங்களிடம் ஆலோசனை கேட்கும், சக பணியாளர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுவீர்கள். உங்களது தலைமை அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். நீங்கள் இன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம்: உணர்ச்சிகளால் மனது பாதிக்கப்படலாம். நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படாமல் இருந்தால், பாதிப்பு ஏற்படும். உங்களது பலவீனத்தை முகத்தில் காட்ட வேண்டாம். மற்றவர்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் பெறக்கூடும். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால், அது உங்கள் வெற்றிப் பாதையில் ஒரு தடையாக இருக்கும்.

கும்பம்: இன்று போட்டியாளர்கள், உங்களைப் பார்த்து ஆச்சரியம் கொள்வார்கள். அதனால் நீங்கள் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். உங்களது திறமையான செயல்பாட்டின் காரணமாக, அனைத்து பிரச்சினைகளும் காணாமல் போகும். உங்களது வெற்றி, கருணை மற்றும் கடின உழைப்பின் காரணமாக, அனைவர் மனதையும் வெல்வீர்கள்.

மீனம்: நிதி நிலைமையை பொருத்தவரை, இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கு உள்ள தொடர்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படிங்க:TODAY HOROSCOPE: பிப்ரவரி 4ஆம் தேதிக்கான ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details