தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜன.8 இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்ப்போம்.

ராசிபலன்
இன்றைய ராசிபலன்

By

Published : Jan 8, 2023, 6:27 AM IST

மேஷம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் தனிமை படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். உறவுகளை பலப்படுத்த நீங்கள், முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்கால பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சிறிது கடினமான, பிரச்னைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாக நன்றாக சிந்தித்து, பொறுமையாக செயல்படவும். தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் சிறந்த வெற்றியடைவீர்கள்.

மிதுனம்: கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் தோன்றும். அதனால் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.

கடகம்: இன்று, உங்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்றைய தினத்தில், தோட்டவேலை, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்கு சிறந்த நாளாகும். இன்றைய தினத்தில், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக, நேரம், பணம் ஆகியவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம்: இன்று, பங்குச்சந்தையின் மூலம் நிதி வரவு இருக்கக்கூடும். நீங்கள் முதலீட்டாளர் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்த கடன்களை தீர்த்து விடுவீர்கள். பொழுதுபோக்கிற்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பும் உள்ளது.

கன்னி: இன்று, குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் உங்களையும் உங்கள் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத் துறையை பொருத்தவரை சாதகமான நிலை இருக்கும். மாலையில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் கோயில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

துலாம்:இன்று, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன், மனதுக்கு பிடித்தவர்களுடனும் சந்தோஷமாக நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை, உங்களது வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வார். ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இருந்து, சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, சிறிது மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் வேலை பளு அதிகரித்ததன் காரணமாக, சோர்வாக உணர்வீர்கள். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். மனநிலையை மாற்றிக் கொள்ள, நீங்கள் உங்கள் காதல் உறவுடன் நேரம் செலவழிக்க கூடும்.

தனுசு:சோதனைக் காலங்கள் எப்போதுமே நீடிப்பதில்லை, உறுதியான மனிதர்கள் நிலைத்து நிற்பார்கள். இதனை மனதில் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவும். நேர்மறையான அணுகுமுறையின் மூலம் வாழ்க்கையை எளிமையாக ஆகவும். தேவைப்பட்டால் மனம்திறந்து பேசவும். தேவையில்லாத நெருக்குதலுக்கு அடிபணிய வேண்டாம்.

மகரம்:உங்களது வெற்றி, உங்களுக்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும். இதன்மூலம் எந்தவித கடினமான நிலைமையின் சமாளிக்கும் திறனை பெறுவீர்கள். வெற்றி பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உங்களுக்கு இருக்காது. எனினும், உங்கள் சாதனைக்கு கடின உழைப்பு முக்கியமான காரணமாக இருந்து வந்துள்ளது. நண்பர்கள் உங்கள் செயல்திறனையும், எதையும் சாதிக்கும் மனப்பான்மையையும் பாராட்டுவார்கள்.

கும்பம்:இன்றைய தினத்தில், நீங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி நடுநிலையுடன் செயல்படுவீர்கள். உங்களது பணியில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கை இரண்டிற்கும், முக்கியத்துவம் கொடுத்து நடுநிலையுடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். ஆனால் சில விஷயங்கள் குறித்த எண்ணம் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

மீனம்:நிதி நிலைமையை பொருத்தவரை, இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கு உள்ள தொடர்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: நவ.9 - இன்றைய ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details