ஓணம் நல்வாழ்த்துகள்
கேரள மக்களின் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகை இன்றுமுதல் 10 நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் எனப் பலர் கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
முதலமைச்சர் ஆலோசனை
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரவிலும் தாஜ்மஹால்
டெல்லியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை இரவில் பார்வையிடுவதற்கு இன்றுமுதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வானிலை
இன்று கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது கன மழையும் இருக்கக்கூடும்.