தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள்- செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - அமித் ஷா

அதிமுக தேர்தல் அறிக்கை, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் அமித் ஷா பரப்புரை, சென்னை கைத்தறி கண்காட்சி நிறைவு, வாரணாசியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தாம்பரம் செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றம், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி என இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday Important national and state events Important national events வாக்குச்சாவடி கைத்தறி கண்காட்சி ராம்நாத் கோவிந்த் அமித் ஷா அதிமுக
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday Important national and state events Important national events வாக்குச்சாவடி கைத்தறி கண்காட்சி ராம்நாத் கோவிந்த் அமித் ஷா அதிமுக

By

Published : Mar 14, 2021, 7:42 AM IST

  1. அதிமுக தேர்தல் அறிக்கை: அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
    அதிமுக தேர்தல் அறிக்கை
  2. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) நடைபெறுகிறது.
    வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
  3. புதிய வாக்காளர்கள் அட்டை பதிவிறக்கம்: புதிய வாக்காளர்கள் வாக்குசாவடி மையங்களில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மார்ச் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    புதிய வாக்காளர் அடையாள அட்டை
  4. கைத்தறி கண்காட்சி நிறைவு: சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கைத்தறி ஆடைகள் மற்றும் நகைக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
    கோ ஆப் டெக்ஸ் பட்டுப் புடவை
  5. அஸ்ஸாமில் அமித் ஷா பரப்புரை: அஸ்ஸாம் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பரப்புரை மேற்கொள்கிறார். தொடர்ந்து அன்றைய தினம் மாலை மேற்கு வங்கம் செல்லும் அமித் ஷா, கட்சி பொதுக்கூட்டம், பேரணியில் கலந்துகொள்கிறார்.
    உள்துறை அமைச்சர் அமித் ஷா
  6. ராம்நாத் கோவிந்த் பயணம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேசத்திற்கு மூன்று நாள்கள் பயணமாக மார்ச் 13ஆம் தேதி சென்றார். அங்கு மார்ச் 15ஆம் தேதி வரை இருக்கும் அவர் இன்று (மார்ச் 14) வாரணாசி செல்கிறார். தொடர்ந்து சேவா கஞ்ச் ஆசிரமத்தின் புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார்.
    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  7. விவசாய சங்க தலைவர் பரப்புரை: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்திவரும் பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் மத்திய அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்கிறார். முன்னதாக நேற்று பாஜக அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.
    பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகைத்
  8. இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்: இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மார்ச் 14) மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதல்
  9. தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் சேவை மாற்றம்: தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 3ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி மார்ச் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு- காஞ்சிபுரம்- அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    ரயில் சேவை மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details