உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (மே 5) அனுசரிக்கப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது, "உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்திய சுற்றுச்சூழலை பாதுகாக்க முக்கிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் எத்தனால் தயாரிப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. இந்தியாவில் 21ஆம் நூற்றாண்டில் பிராதன முக்கியத்துவத்தை எத்தனால் பெற்றுள்ளது. 2025க்குள் 20 விழுக்காடு எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு என்ற இலக்கை இந்தியா எட்டும்.