டெல்லி:2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 விழுக்காட்டில் இருந்து 8.10 விழுக்காடாகக் குறைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2020-21ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு டெபாசிட்டுகளுக்கான 8.5 விழுக்காடு வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.10 விழுக்காடாக குறைப்பு
2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 விழுக்காட்டில் இருந்து 8.10 விழுக்காடாகக் குறைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 2020-21ம் ஆண்டிற்கான வட்டி வருமானத்தை 8.5 சதவீதத்தில் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்க அலுவலகங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மத்திய அறங்காவலர் வாரியத்தின் முடிவுக்குப் பிறகு, 2021-22க்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ஒப்புதல் பெற நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது. நிதி அமைச்சகம் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே வைப்பு நிதி வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.