தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: காசி விஸ்வநாதர் ஆலய கர்ப்ப கிரகத்திற்குள் செல்ல தடை! - வாரனாசி காசி விஸ்வநாதர் ஆலயம்

கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலய கர்ப்ப கிரகத்திற்குள் பக்தர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாரனாசி காசி விஸ்வநாதர் ஆலயம்
வாரனாசி காசி விஸ்வநாதர் ஆலயம்

By

Published : Apr 10, 2021, 7:32 PM IST

வாரணாசி (உத்தரப் பிரதேசம்):காசி விஸ்வநாதர் ஆலய கர்ப்ப கிரகத்திற்குள் பக்தர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், கோயில் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இனிமேல், வருகை தர விரும்பும் பக்தர்கள் பாபா விஸ்வநாத்தின் ஆலயத்தில் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

அங்கு வெளியே பக்தர்களுக்கு என வெளியே வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் கங்கை நீர், பால் ஆகியவற்றைக் காணிக்கையாக வழங்க முடியும்.

இது தவிர, மறுஉத்தரவு வரும் வரை மங்கள ஆர்த்திக்காக நுழைவுச் சீட்டின் விற்பனைக்கும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details