தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒருவரை தவிர அனைவருக்கும் கரோனா: விசித்திர கிராமம்! - தோராங் கிராமம்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தோராங் கிராமத்தில் ஒருவரைத் தவிர அனைவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பூஷன் தாகூர்
பூஷன் தாகூர்

By

Published : Nov 21, 2020, 8:55 PM IST

இமாச்சலப் பிரதேசம் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள தோராங் கிராமத்தில் 42 பேர் உள்ளனர். ஆரம்பத்தில் அவர்களில் ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் கரோனா முடிவுகள், வழங்கப்பட்டன. அதில் ஆச்சரியமான நிகழ்வு நடந்துள்ளது.

அக்கிராமத்தில் உள்ள பூஷன் தாகூர் (52) என்பவரைத் தவிர மீதமுள்ள அனைவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவரது குடும்பத்தினருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட நிலையில், அவருக்கு வைரஸ் பாதிப்பில்லாதது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 1663 பேருக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details