திருவனந்தபுரம்: கேரள உயர் நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு திங்கள்கிழமை (மார்ச் 29) இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அதில், “ஒரு நபருக்கு ஒரு வாக்கு” என்பதை உறுதி செய்யுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கேரளத்தில் மாநில வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன.
இதனால் ஒரு வாக்காளர் இரண்டு இடங்களில் வாக்களிக்க வாய்ப்புகள் உள்ளன” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்துக்கு விரிவான இடைக்கால உத்தரவு ஒன்றை அளித்துள்ளனர். அந்த உத்தரவில், நீதிமன்றம் இந்த விஷயத்தை தீவிரமாக ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த தெளிவான விவரங்கள் திங்கள்கிழமை மாலைக்குள் வெளியிடப்படும்.
மேலும், மாநிலத்தில் வாக்காளர்கள் ஒருமுறை மட்டுமே வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். கேரளத்தில் 140 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.