டெல்லி:தேசிய அணு அளவியல் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தொடக்க உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இந்திய தரத்தின் மீதான நம்பகத்தன்மையை வலுப்படுத்த வேண்டும்.
இந்திய அறிவியலாளர்கள் வெற்றிகரமாக கரோனாவுக்கு எதிரான இரண்டு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். அவர்களை எண்ணி நாடு பெருமைக்கொள்கிறது.
இன்று தேசிய அணு அளவீட்டை அறிவியல் அறிஞர்கள் நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளனர். அவர்களது உதவியால் அறிவியல் நிறுவனங்கள் குறித்த விழுப்புணர்வு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.
நாட்டின் முதல் தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய வளர்ச்சிகள் மூலம் நம் நாட்டின் பெருமை மேலும் அதிகரிக்கும். நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. " என்றார்.
இதையும் படிங்க:புதுவையில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு!