காஷ்மீர் அவந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் இன்று(ஏப்ரல்.9) சுற்றிவளைத்தனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் சுடத்தொடங்கினர்.
பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை அதிரடி - Two militants gunned down
ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
![பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை அதிரடி Awantipora](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11336027-thumbnail-3x2-mili.jpg)
அவந்திபோரா
இதனையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஷோபியனில் நேற்று, நடந்த தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க:கிழக்கு லடாக் மோதல்: சீனாவுடன் இன்று 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை