ஸ்ரீநகர்: காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீர்ஹாமா பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்த நிலையில் அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர்.
இதையடுத்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. சம்பந்தப்பட்ட இடத்தில் இன்னமும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பாதுகாப்பு படையினருடன் ஜம்மு காஷ்மீர் போலீசாரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் தங்களை இணைத்துக்கொண்டு போரிட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : பெட்ரோல் குண்டு வீசிய புர்கா பெண் கைது!