காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் மார்சார் பகுதியில் உள்ள நாக்பெரான்-தார்சார் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை சுற்றிவளைப்பதற்காக இன்று (ஜூலை 31) காலை பாதுகாப்பு படையினரும், காவல் துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
புல்வாமா துப்பாகிச் சூடு - 2 பயங்கரவாதிகள் கொன்ற பாதுகாப்பு படை
08:36 July 31
புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை இரண்டு பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இதுவரை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் காஷ்மீர் மண்டல் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க :பாரமுல்லா வெடிகுண்டு தாக்குதல் - 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்