ஜம்மு காஷ்மீர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள பிரைஹார்ட் கத்போரா என்ற கிராம பகுதியில் இன்று (ஜூலை 27) அதிகாலையில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் குல்காமில் தொடங்கியது துப்பாக்கிச்சூடு - காஷ்மீர் மணடல காவல் துறை
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சூடு தொடங்கியுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Encounter in Kathpora Yari pora area of Kulgam
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரைஹார்ட் கத்போரா பகுதியில் துப்பாக்கிச்சூடு தொடங்கியுள்ளது. காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து இதில் ஈடுபட்டுள்ளனர்" என பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க:'என்னை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்றிவிட்டார்கள்..!' - திருநங்கையின் திடுக்கிடும் புகார்!