தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர்: பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை - பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில், வகோரா என்னும் இடத்தில் பயங்கரவாதி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்

Terrorist killed in J-K encounter
Terrorist killed in J-K encounter

By

Published : Jun 16, 2021, 9:37 AM IST

ஸ்ரீநகர்(ஜம்மு - காஷ்மீர்): பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதலில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து காஷ்மீர் காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 'ஜுன் 15 நள்ளிரவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வகோரா என்னும் இடத்தில் நடைபெற்ற மோதலில், ஒரு அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டார்' என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் ட்விட்டர் பக்கம்

முன்னதாக கடந்த சனிக்கிழமை, சோபோர் என்னும் இடத்தில் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில், இரண்டு காவல் துறையினர், மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் இரண்டு காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா என்னும் பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியுள்ளது என காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று, பிற்பகல் 12 மணிக்கு, சோபோர் நகரச்சந்தையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையில், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details