ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளை என்கவுன்ட்டர் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 4-ம் தேதி பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி நிசர் கான்டெ சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
மீண்டும் என்கவுன்ட்டர் தொடங்கிவிட்டது - பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை! - பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பானிபோரா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
Encounter
இந்த நிலையில், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பானிபோரா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பானிபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி தாக்குதல் நடந்ததில் , பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயில் சேவை 2026இல் தொடக்கம்!