ஜம்மு காஷ்மீர் மாநிலம் பரமுல்லாவின் பட்டான் பகுதியில் இருக்கும் எடிபொரா என்ற இடத்தில் இன்று அதிகாலை முதல் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை தொடங்கியுள்ளது. தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
முன்னதாக தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சித்ரகாம் பகுதியில் பயங்கரவாதிகளும், ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் காவல்துறையினருக்கும் இடையே சண்டை நடைபெற்றது.