ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் தென்பகுதியான சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹரிபோரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதியில் தீவிர ரோந்து சுற்றிவந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இந்த நிலையில் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்ப படையினருடன் மாநில போலீசாரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்திவருகிறார்கள். எனினும் இந்தத் தாக்குதலில் காயமுற்றவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இன்று (ஏப்.7) ஹரிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவரும் நிலையில் நேற்று (புதன்கிழமை) புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பயங்கரவாதிகள் மறைவிடத்தை சுற்றிவளைத்த ராணுவம்: ஆயுதங்கள் பறிமுதல்