காஷ்மீர் புல்வாமாவில் ககபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், காஷ்மீர் காவல் துறையும், பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர், சரணடையுமாறு கூறியுள்ளனர். ஆனால், பயங்கரவாதிகள் வெளியே வர மறுப்புத் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது. கிடைத்த தகவலின்படி, மூன்று பயங்கரவாதிகள் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.