ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் லஷ்கர் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி அபு ஹூராரியா உள்பட மூன்று பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தத் தகவலை ஜம்மு காஷ்மீர் மண்டல காவல் தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் காவல் தலைவர் ட்வீட் 2021ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 91 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் பாதுகாப்புப் படையினர் 19 பேர் உயிரிழந்தனர் என ராணுவத் தகவல் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க:டெல்லியில் ஜூலை18இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்