சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தர் அருகே உள்ள பக்னா என்ற கிராமத்தில் போலீசாருக்கும், 3 பேர் அடங்கிய கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை இன்று (ஜூலை 20) நடந்துள்ளது. அதில், ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியை போலீசார் சுற்றிவளைத்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பஞ்சாப் போலீசாரின் கேங்ஸ்டர் ஒழிப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டது.