தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் தொடரும் என்கவுண்டர்.. பதற்ற நிலை.. பாதுகாப்பு படை- பயங்கரவாதிகள் மோதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த என்கவுன்டர் இன்னும் தொடர்கிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

encounter between security forces and terrorists continues in Jammu and Kashmir Pulwama district
பயங்கரவாதிகள் தொடர் மோதல்

By

Published : Aug 21, 2023, 9:49 AM IST

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில், தற்போதும் அதே நிலை தொடர்ந்து நீடித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் இந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் இதுவரை உயிரிழப்புகள், காயமடைந்தவர்கள் குறித்த விபரம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து X (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் காஷ்மீர் மண்டல காவல்துறை (Kashmir Zone Police) பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "புல்வாமாவின் லரோ-பரிகம் பகுதியில் என்கவுண்டர் தொடங்கி உள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர். விவரங்கள் தொடரும்" என பதிவிடப்பட்டு உள்ளது.

இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், என்கவுண்டர் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு மே மாதம், பாரமுல்லாவில் நடந்த என்கவுண்டர் ஒன்றில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு இறந்தார்.

ரஜோரியில் உள்ள கண்டி காட்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. மே மாதம், ஜி 20 மாநாட்டின் போது, அனந்த்நாக்கில் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தனர்.

இந்த ஆண்டு ஆகஸ்டில், ரஜோரி மாவட்டத்தில் உள்ள புத்தல் பகுதியில் உள்ள குந்தா-கவாஸ் கிராமத்தில் நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். உளவுத்துறையின் தகவல் படி இந்த என்கவுண்டர் நடவடிக்கை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் கவிந்த பேருந்து: 8 பேர் பலி; 27 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details