ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஹெப் சிர்மல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
ஷோபியானில் பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை வீரர் படுகாயம் - ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஷோபியானில் பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை வீரர் படுகாயம்
அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதேநேரம் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:குப்வாரா என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை