டெல்லி: மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம், Biological E என்னும் நிறுவனம் தயாரித்த 12-18 வயதுக்குட்ப்பட்டவர்களுக்கான கோர்ப்வாக்ஸ் (Corbevax) தடுப்பூசியை அவசர கால பயன்பட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை நேற்று (பிப். 14) பிறப்பித்துள்ளது. எனினும் இந்த ஒப்புதல் சில நிபந்தனைகளுக்குட்பட்டது.
15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், அப்பணியை மேலும் துரிதப்படுத்தும் விதத்தில் கோர்ப்வாக்ஸ் (Corbevax) தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.