ஜெர்மனி (முனிச்):ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 26) அங்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பேசிய அவர், "இந்தியர்களாகிய நாம் அனைவரும் நம் நாட்டின் ஜனநாயகத்தை நினைத்து பெருமைப்படலாம். இந்தியா, ஜனநாயகத்தின் தாய் என்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, உடை, இசை மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி.