மேற்கு கோதாவரி:ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள எலுரு பகுதி மக்கள் கடந்த 5ஆம் தேதி முதல் வாந்தி, தலைவலி, மயக்கம், வலிப்பு, மறதி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சிலர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பினும், தொடர்ந்து மக்கள் இந்தப் புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இதுவரை இந்த நோயால் 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் தற்போது 46 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
வேளாண் பகுதியான எலுருவில் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரிகளில் காரியம், நிக்கல் அதிகளவு இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நச்சு காரணமாகவே அவர்களுக்கு இதுபோன்ற உபாதைகள் ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது, பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள், தண்டுவட நீர் மாதிரிகள், தண்ணீர் மாதிரிகள், சி.டி. ஸ்கேன்கள், அப்பகுதியில் விளையும் காய்கறிகள், பால் ஆகியவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆந்திராவை மிரட்டும் புதிய நோய்;500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - வெங்கையா நாயுடு கவலை