தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்விட்டர் லோகோவை மாற்ற திட்டம்? எலான் மஸ்கின் புதிய 'X' logo! - டிவிட்டர் லோகோ மாற்றம்

ட்விட்டர் லோகோவான நீல பறவைக்கு பதிலாக X லோகோவை வைக்க உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். கடந்த ஜூலை 12ஆம் தேதி xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கிய நிலையில் அதை விளம்பரப்படுத்தும் வகையில் ட்விட்டர் லோகோவை அவர் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Elon musk
Elon musk

By

Published : Jul 23, 2023, 3:55 PM IST

சான் பிரான்சிஸ்கோ : ட்விட்டர் லோகோவை விரைவில் மாற்ற உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். நீல் நிற குருவிக்கு பதிலக X லோகோவை வைக்க உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அதுமுதலே ட்விட்டரில் அவர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் பெற பயனர்கள் 8 டாலர் சந்தா செலுத்த வேண்டும், நாளொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்வீட் போட மற்றும் மற்றவர்களின் ட்வீட்டுகளை பார்க்க முடியும் என பல்வேறு கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் மேற்கொண்டார்.

இதனிடையே எலான் மஸ்கிற்கு போட்டியாக, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்கு பதில் திரட்ஸ் என்ற சமூகவலைதளத்தை அறிமுகப்படுத்தியது. தொடங்கிய சில நாட்களிலேயே 15 மில்லியனுக்கு அதிகமான பயனர்கள் இணைந்ததாக திரட்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் திரட்ஸ்க்கு போட்டியாக ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் முன்னோட்டமாக அவர், ட்விட்டரின் லோகோவை மாற்ற திட்டமிட்டு உள்ளார். நீல நிற குருவிக்கு பதிலாக ட்விட்டர் லோகோவாக X என வைக்க திட்டமிட்டு உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், "வெளிப்படையான மற்றும் நேர்மறையான கருத்துகளை விரும்புவதாகவும், விரைவில் டிவிட்டர் பிரண்ட் மற்றும் அனைத்து பறவைகளுக்கு விடைபெறுவோம்" என்று பதிவிட்டு உள்ளார். மேலும், "நல்ல மற்றும் போதுமான X லோகோ இன்று இரவு முதல் வெளியிடப்பட்டால், நாளை உலகம் முழுவதும் நேரலை செய்வோம்" என்று பதிவிட்டு உள்ளார்.

முன்னதாக நீல நிறத்திலான குருவி கருப்பு நிற பின்னணியில் இருக்கும் புகைப்படத்தை மஸ்க் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருந்தார். மேலும் சிறிது நேரத்தில் X என்ற புகைப்படத்தை வெளியிட்டார். ட்விட்டர் லோகோவாக X மாற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை 12ஆம் தேதி புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கினார்.

அதற்கு xAI என பெயரிடப்பட்டு இருந்தது. ஒருவேளை அந்த நிறுவனத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்க் ட்விட்டர் லோகோவை மாற்ற திட்டமிட்டு உள்ளாரா என்ற கேள்விகள் எழுந்து உள்ளன. இதற்கு முன் ஒருமுறை ட்விட்டரை விலை கொடுத்து வாங்கினால் அதன் நீல நிற குருவிக்கு பதிலாக டாஜ் காயின் எனப்படும் நாயின் புகைப்படத்தை வைப்பதாக எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம், ட்விட்டரின் லோகோவாக நீல் பறவைக்கு பதிலாக டாஜ் மீமை எலான் மஸ்க் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க்கின் ட்விட்டர் லோகோ மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :Korea Open Badminton : சாத்விசாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன்!

ABOUT THE AUTHOR

...view details